கோவை சங்கனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தூய்மை பணியில் இருந்த மாநகராட்சி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கணபதி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி அனிதா மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். வடிவேலுக்கும், அனிதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.
இந்த நிலையில் இருவருக்குமான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.இது தொடர்பாக இருதரப்பு உறவினர்களும் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை இருவருக்குள்ளும் தொடர்ந்து மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் இன்று காலை அனிதா வழக்கம் போல அனிதா தூய்மைப் பணிக்குச் சென்ற நிலையில், வடிவேலு அவர் எங்கு வேலை செய்கிறார் என சக ஊழியர்களிடம் கேட்டு தேடிச் சென்றுள்ளார்.

அப்போது அனிதா பணியில் இருந்த சங்கனூர் நாராயணசாமி வீதியில் உள்ள பூங்காவிற்கு சென்ற வடிவேலு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.நீண்ட நேரம் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நீடித்தது.பலர் சமாதானம் செய்தும் பலன் இல்லாமல் போனது.இருவரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வடிவேலு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அனிதாவின் தலையில் வெட்டியுள்ளார்.
பலர் தடுத்தும் வடிவேலு கோபம் அடங்காமல் ஆவேசமாக கத்தி கொண்டே தாக்குதலில் ஈடுபட முயன்றார்.யார் சொல்லியும் கேட்கவில்லை வடிவேலு.மேலும் அனிதவை பலமாக தாக்கினார்.அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் வடிவேலுவிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென அனிதா பலமுறை முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த தப்ப முயன்ற அனிதாவை மீண்டும் துரத்தி வெட்ட வடிவேலு முயலவே அங்கிருந்த பொதுமக்கள் கூடி வடிவேலுவை பிடித்து அவரிடமிருந்த அரிவாளை பிடுங்கினர்.மேலும் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் அனிதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் அரிவாளுடன் கணவர் வடிவேலுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனே மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.