காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரதப் பிரதமரை இழிவாக பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் தொண்டர்களை கைது செய்ய முயன்ற போது, போலிசாரிடம் தள்ளுமுள்ளு. அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபுவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறையினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்க பல்வேறு கிராமங்களுக்கு சென்று இருந்தார். அவ்வகையில் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து வைத்து, அங்கு திரண்டு வந்த மகளிர், திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவில்லை என்று கூறி, முற்றுகையிட்டு கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் என்பவர், பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்ட பாஜக கட்சி தொண்டர்கள் எஸ்.பி அலுவலகத்தில் சென்று அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக கட்சி தொண்டர்கள் முற்றுகையிட முயன்ற போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யாமல் நின்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்ய கூடாது என பாஜகவினர் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது, பாஜக கட்சி தொண்டர்கள் அனைவரையும் குண்டு கட்டாக காவல்துறையினரால் தூக்கி செல்லப்பட்டு, பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தொண்டர்களை அடைத்து வைத்தனர். இதில் கைது செய்த போது உடன்பட மறுத்த மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபுவை குண்டுகட்டாக தூக்கிச் சென்றது காவல்துறையினர். தகவல் அறிந்து வந்த திமுக கட்சி தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ஒன்று கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.