இரவு நேரத்தில் பந்து விளையாடியதால் மாணவனை தாக்கிய விடுதி காவலாளி.எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவன்.

2 Min Read
எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவன்

மாணவர்கள் என்றால் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். விளையாட்டு என்று வந்துவிட்டால் அவர்களுக்கு நேரம் காலம் எதுவும் தெரியாது.விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களான ஹாஸ்டல் இயங்கி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாணவர்கள் சிலர் விடுதியில் பந்து விளாயாடியுள்ளனர்.விடுதியில் இரவு பணியில் இரவு நேர வாட்ச்மேன் ஒருவர் பணியில் உள்ளார்.

இரவு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 7-ம் வகுப்பு மாணவன் ஈஸ்வரனை,
ஒக்கநாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டாயுதபாணி இரவு வாட்ச்மேனாக பணியாற்றுபவர் பந்து விளையாடியதற்காக மாணவனை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் இடது கையில் பலமாக தாக்கியுள்ளார்.இதனால்  மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவனுக்கு கையில் மாவு கட்டு போட்டு உள்ளனர். வாட்ச்மேன் தாக்கியதால் தான் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.வாட்ச்மேன் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவனை மருத்துவமனைக்கு கூட்டி சென்று  சிகிச்சை  அளிப்பதற்கு கூட ஹாஸ்டல் வாட்ச்மேன் வரவில்லை என மாணவர்களின் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பள்ளி மாணவன் ஈஸ்வரனை தாக்கிய சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க மாணவனுக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.விடுதி நிர்வாகிகள்.இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் இப்பகுதி பள்ளி மாணவர் இடத்தில் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் பள்ளி மாணவனை தாக்கிய வாட்ச்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் கோரிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, தனக்கு தற்போது வைரஸ் காய்ச்சல் என்பதால் விடுமுறையில் இருப்பதாகவும். மேலும் சம்பவம் நடைபெற்றது விடுதி என்பதால் எனக்கு தொடர்பில்லை. இந்த சம்பவம் எனக்கு தெரியாது. நாளை பள்ளிக்கு வந்த பிறகுதான் விசாரணை செய்து என்ன உண்மை சம்பவம் தெரிய வரும் என தெரிவித்தார்.தலைமை ஆசிரியர் இப்படி பொருப்பில்லாமல் பேசுவது பெற்றோர்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள்.

Share This Article
Leave a review