- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்டர்டாங், கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஞ்சலையின் மகள் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/two-wheeler-accident-near-kummidipoondi-woman-named-vishwa-priya-dies/
அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தனது தாய்க்கும் எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.