லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 357 மீன் கடைகளுக்கு ஆக.12 முதல் ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

2 Min Read

மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இந்த லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள மீன் சந்தையில் உள்ள 360 கடைகளில், 357 கடைகள் ஒதுக்கீடு திங்கள் கிழமை முதல் துவங்கப்படும் எனவும், பயனாளிகளின் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி கடைகளை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் மீனவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார்.

மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது. சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மாநகராட்சி சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனை சந்தையில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 366 கடைகளைக் கொண்ட இந்த சந்தையில் சிசிடிவி கேமரா, கழிவறை, மீன்களை வெட்டி சுத்தம் செய்ய தனிப்பகுதி, பைக் மற்றும் கார் பார்க்கிங் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீன் கடைகளுக்கான ஒதுக்கீட்டுப் பணிகளை தொடரவும், இறுதிப் பயனாளிகள் பட்டியலுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதேபோல சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு அந்த வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் இருவாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Share This Article
Leave a review