தினந்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார் கவர்னர். முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்.

2 Min Read
முதல்வர் மு க ஸ்டாலின்

மக்கள் நலன் பேணுவதிலும், கல்வியிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி மாநிலத்திலேயே மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் தினமும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லி மக்களை குழப்புகிறார். ஆனால் இந்த செயல் எல்லாம் மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நகர்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்.
கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு இரண்டு கண்களாக நினைத்து போற்றி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலன் பேணுவதில் மிகச் சிறந்த தமிழ்நாடு ஆகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சியை மாநிலத்திலேயே மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை.
திராவிட மாடல் ஆட்சி ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்கள் ஆக்கி தொடர்ந்து தினந்தோறும் எதாவது ஒரு செய்தியை சொல்லி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து அதை அப்படியே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
புதிய ஆட்சி வந்த பிறகு தான் முதல்வராக மற்றவர்கள் எல்லாதுறையின் அமைச்சர்களாக பொறுப்பேற்று இருந்தாலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் மா.சு தான். ஆனால் மாசு மட்டுமல்ல முதல்வர் உள்பட எல்லா அமைச்சர்களும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மாறினோம். அதனால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியிலே ஒரு பெரிய வெற்றியை பெற்றோம். இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களில் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக மக்கள் நல்வாழ்வு விளங்கி வருவதுடன் தனிநபருக்கான சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும் நம் மாநிலத்தில் தான். மருத்துவத்துறையில் சிறப்பினை இது வெளிப்படுத்துகிறது என்று பேசினார்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review