பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலே உடல் சிதறி பலி…

1 Min Read
தீ விபத்து ஏற்பட்ட கடை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு கடையில்  சட்டத்திற்கு புறம்பாக கடையின் பின்புறம் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்ததாக கூறப்படுகிறது.‌‌

- Advertisement -
Ad imageAd image

இந்தப் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும் போது வேதிப் பொருளில் திடீரென ஏற்பட்ட உராய்வில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் என்கிற பட்டாசு தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு தொழிலாளர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்கள் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் கடையின் முன்பு இருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீயில் இருந்து சேதமானது இந்த தீ விபத்து குறித்து‌‌ ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review