கவரிங் செயின் அனிந்து சென்று கொள்ளையனை தட்டி தூக்கிய பெண் போலீசார்..!

2 Min Read
அங்கையன் (எ) ஆனந்தன்

சென்னைக்கு ரயிலில் தனியாக வரும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்துக் கொள்ளையனை கவரிங் செயின் உடன், சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கி பிடித்தனர்.தனியாக வரும் பெண்களிடம் கத்தியை காட்டி நகை பறிக்கும் கூட்டம் கைவரிசை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

சென்னை வரும் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களை குறிவைத்து மாஸ்க் அணிந்த கொள்ளையன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்வதாக புகார்கள் வந்தன. இரு மூதாட்டிகளும் தங்க கம்பலை மிரட்டி பறித்துச் சென்ற கொள்ளையன் அரசு பெண் அதிகாரி ஒருவரது கையில் கத்தியால் வெட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றான்.

கொள்ளையடித்த நகைகள்

இந்த கத்திக்குத்துக் கொள்ளையனை பிடிக்க ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் சிங்கம் படத்தில் சூர்யாவின் வலதுகரம் போல நடித்த டிஎஸ்பி போல நிஜ டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீசார் காத்திருந்தனர் கொள்ளையனை பிடிக்க.

மாஸ்க் அனிந்து வரும் திருடனை பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டது.இதில் உள்ள காவல் ஆய்வாளரும், பெண் போலீஸ் ஒருவரும் சுடிதார் மற்றும் சேலை அணிந்து கழுத்தில் கவரிங் செயின் உடன் கடந்த 10 தினங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு ரயில்களாக பயணித்தனர்.திருடன் பிடிபடமாட்டானா என்று காத்திருந்தனர் போலீசார்.

நகையை பறிக்கொடுத்த மூதாட்டி

இந்த நிலையில் அவர்கள் எதிர்பார்த்தபடியே சம்பவத்தன்று அந்த மாஸ்க் ஆசாமி ஒரு ரயிலில் வந்தான். பின்னர் கழுத்தில் செயினுடன் தனியாக அமர்ந்து இருந்த பெண் போலீஸிடம் நகையை பறிக்க முயல அவனைப் பெண் காவல் ஆய்வாளர் உடன் மடக்கி பிடித்தனர். அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இருவரும் உதவினார்.

பிடிப்பட்ட கொள்ளையனிடம் விசாரித்த போது அவன் பெயர் அங்கையன் (எ) ஆனந்தன் என்பதும்,அவன் பகல் நேரத்தில் கட்டிட மேஸ்திரி வேலையும், இரவு நேரங்களில் கொள்ளையனாகவும் இருந்துள்ளான்.அவன் அன்றைய தினமும் கொள்ளைத் திட்டத்துடன் ரயிலில் ஏறி சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். தொடர்ந்து இவனுக்கு ரயிலில் கொள்ளையடிப்பதுதான் தொழில். துணிச்சலுடன் மடக்கி பிடித்த பெண் காவலர்களும், உதவிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இருவருக்கும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இப்படி தனியாக வெளியே செல்லும் பெண்கள் நகைகள் அணிந்து சென்றாள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர்.

Share This Article
Leave a review