நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் மற்றம் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் மலை மாவட்டத்தை நோக்கி படை எடுத்துள்ளது.
நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மஞ்சூர் அருகே உள்ள கெத்தைப் பகுதியில் இருந்து இரண்டு குட்டிகளுடன் கூடிய ஐந்து யானைகள் பழனியப்பா மாணார் கொலக்கம்பை மற்றும் தூதூர்மட்டம் பகுதியில் முகாமிட்டிருந்தது.
இந்த காட்டு யானைகள் கெத்தையிலிருந்து கடந்த முறை இப்பகுதிக்கு வந்த போது கிழிஞ்சாடா பகுதியில் குட்டியை ஈன்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கிழிஞ்சாடா பகுதியில் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது இதனை தொடர்ந்து கிளிஞ்சாடா அருகே உள்ள சட்டன் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஐந்து யானைகளை விவசாயிகள் தீப்பந்தங்கள் மற்றும் பட்டாசுகளை வைத்து விரட்ட சென்றனர் அப்பொழுது ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை ஒன்று விவசாயிகளை விரட்டியது மேலும் வனத்துறையினர் ஐந்து காட்டு யானைகளையும் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.