தோப்பில் ஆடு மேய்ந்ததால் விவசாயி வெட்டி படுகொலை. தலைமறைவாக உள்ள இளைஞர்.

0
74
குணசேகரன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (42). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தென்னை தோப்பில் இன்று வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் குணசேகரன் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து பட்டுக்கோட்டை தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குணசேகரன் வளர்க்கும் ஆடுகள் அருகில் உள்ள தோப்பில் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதனால் பக்கத்து தோப்பில் வேலை பார்க்கும் முத்துசெல்வன் (27) என்பவருக்கும் – குணசேகரனுக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள முத்துசெல்வனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here