கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியிலிருந்து சாகுபடி செய்யப்படும் தக்காளி தமிழகத்தில் சென்னை, திருச்சி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் காரணமாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்திருந்த நிலையில்.
15 கிலோ கொண்ட கூடை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்க்கப்பட்டு வருகிறது. தக்காளியை விவசாயம் செய்த பணம் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தக்காளிகளை அறுவடை செய்யமால் தோட்டத்திலேயே விட்டு ஆடு,மாடுகளுக்கு உணவாக்கி வருகிறனர்.

இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் தனது தக்காளி தோட்டத்திலிருந்து தக்காளிகளை சாகுபடி செய்து கிருஷ்ணகிரியில் உள்ள தக்காளி சந்தைக்கு விற்க சென்றுள்ளார். அங்கு விலை குறைவாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் கேட்ட நிலையில் தக்காளியை விற்க முடியாமல் வேதனை அடைந்த விவசாயி வீடு திரும்பி நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியில் சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்றார்.