அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து அணி, வெற்றி மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான்..!

3 Min Read
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் போட்டி தொடர் கடந்த ஐந்தாம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி உடனான லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

- Advertisement -
Ad imageAd image

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் களத்தில் இறங்கினர். இப்ராஹிம் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க அதிரடியில் இறங்கிய குர்பாஸ் இங்கிலாந்து அணி பந்துவீச்சை பதம் பார்த்தார். சிறப்பாக விளையாடிய குருபாஸ் 33 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்தது. இப்ராஹிம் 28 ரன், ரஹ்மத் ஷா 3 ரன் எடுத்து அதில் ரசித் சூழலில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்

குர்பாஸ் 80 ரன் ( 57 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர் ) விளாசி துருதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 8 ரண்ணுக்கு 3 விக்கெட் விழுந்ததால் ஆப்கானிஸ்தான் அணி திடீர் சரிவை சந்தித்தது. கேப்டன் ஷாகிதீ 14, உமர் சாய் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினர். முகமது நபி 9 ரன் எடுத்தார். இக்ரம், ரஷித் கான் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தனர்.

ரசித் 23 ரன்னில் வெளியேற இக்ரம் முஜிப் ஜோடி அதிரடியாக 44 ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது. இக்ரம் 58 ரன் ( 66 பந்து, 3 பவுண்டரி, இரண்டு சிக்சர்) முஜிப் உர் ரகுமான் 28 ரன் (16 பந்து மூன்று பவுண்டரி ஒரு சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்க நவீன் உல் ஹக் ஐந்து ரன்னில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அதில் ரசித் 3, வுட் 2, டாப்லீ, லிவிங்ஸ்டன், ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

இதைத்தொடர்ந்து 50 ஓவரில் 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பேர்ஸ்டோ மற்றும் மலான் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 2, ஜோ ரூட் 11 ரன்னில் ஆட்டம் இழக்க, ஓரளவு தாக்கு பிடித்த மலான் 32 ரன் எடுத்து முகமது நபி பந்து வீச்சில் இப்ராஹிம் வசம் பிடிபட்டார்.

ஒரு முனையில் ஹாரி பூரூக் உறுதியுடன் போராட கேப்டன் பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன், சாம் காரான் தல 10 ரன் எடுத்து அணிவகுத்தனர். வோக்ஸ் 9, ஹாரி பூரூக் 66 ரன் ( 61 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்ஸர்) அதில் ரசித் 20 ரன் மார்க் வுட் 18 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 215 ரன்னுக்கு சுருண்டது. டாப்லி 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் முஜிப், ரஷீத் தலா 3 விக்கெட்டுகள் நபி 2 விக்கெட்டுகள் , பரூக்கி மற்றும் நவீன் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Share This Article
Leave a review