வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போர்வை வழங்கினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார் கூறுகையில் “ஒரு நாள் மழைக்கே தமிழகம் தத்தளித்து வருகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு கிடைத்த கொடை, அரசியல், கால்புணர்ச்சி காரணமாக குடிமாரமத்து திட்டம் முடக்கப்பட்டது. நீர் நிலைகள் தூர் வராமல் இருந்தால் மழை நீரே எங்கே சேமிப்பது? மழைக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொள்ளவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இலவச வேஷ்டிகள் திருடப்பட்டன.

இலவச வேஷ்டிகளை பாதுகாக்க முடியாத தமிழக அரசு மக்களை எப்படி பாதுகாப்பு கொடுக்க போகிறது. திமுகவின் 520 வாக்குறுதிகள் கடலில் கறைத்த பெருங்காயம் போல உள்ளது. கொசு உற்பத்தி, கடன் வாங்குவது, சாலை விபத்துகள் போன்றவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 100 நாட்கள் வேலை பணியாளர்களுக்கு 13 வாரமாக ஊதியம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்கள், தோழமை கட்சிகளுக்கு வாய்பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது.
சமூக நீதி, பெண் உரிமை குறித்து பேசுதற்கான தகுதியை திமுக இழந்து விட்டது. நீட் ரத்து கையெழுத்தை யாரிடம் கொடுக்க போகிறார்கள். நீட் ரத்து கையெழுத்து இயக்கம் தோழமை கட்சிகளை சமாதானம் செய்யவே நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது. நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல, ஒ.பி.எஸ் செயல்பட்டார். உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவை தெளிவான பாதையில் பயணம் செய்ய வைக்கும். அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிமுக கதவு திறந்து இருக்கும். எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக இணைவதற்க்கான கதவு மூடப்பட்டுள்ளது” என கூறினார்.