பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் மழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க 7 பொக்லைன் (ஜேசிபி) வாகனங்கள் மற்றும் மழைநீரை வெளியேற்றும் நீர் மோட்டார்கள், 5 ஆயிரம் மணல் மூட்டைகளுடன் நெடுஞ்சாலைத்துறை தயாராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2009ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழையினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், மழை பெய்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார் நிலையில் உள்ளது. மழைநீர் தேங்காாமல் இருப்பதற்கும், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை குறித்து பேட்டி.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தும், வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்தும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு மழை தொடர்பான எச்சரிக்கை வந்து கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மாவட்டத்தில் பாதிக்கப்படும் கட்டிடங்கள் எந்தெந்த இடங்களில் மழைநீர் தேங்கும் என்பது குறித்து பட்டியல் தயார் செய்து அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மழைநீர் தேங்காமல் இருப்பதற்கும், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கும், நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. வாய்க்கால்கள், வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு மழை நீர் நீர்நிலைகளுக்கு சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் மட்டுமே தற்போது வந்துள்ளது.

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கும், தகவல் கேட்பதற்கும் 10 77 222207 என்ற டோல் ஃப்ரீ தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையின் போது சாலைகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்கப்பட்டு சில மணி நேரங்களில் போக்குவரத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.