- விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது!..மாநாட்டு மேடையில் தோன்றிய TVK தலைவர் விஜய்..
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடைக்கு சரியாக 4 மணிக்கு விஜய் வந்தார். அவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். சிறிது நேரம் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அவர் கட்சி நிர்வாகிகள் வழங்கிய பூங்கொத்தை பெற்றுக் கொண்டார். பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் நோக்கி ஓடி வந்தார்.
தொண்டர்களை நோக்கி கையசைத்த அவருக்கு கட்சி கொடி பதித்த துண்டுகள் ரேம்ப் நோக்கி வீசப்பட்டன. கீழே விழுந்த துண்டை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார். பிறகு நிறைய துண்டுகள் விழுந்த போது அதில் சிலவற்றை கேட்ச் பிடித்தபடியே அணிந்து கொண்டார். பின்னர் அவர் திரும்பவும் மேடை நோக்கி வந்த போது அணிந்திருந்த துண்டுகளை தொண்டர்கள் நோக்கி வீசினார். மேலும் தான் அணிந்திருந்த துண்டுகளில் ஒன்றை மட்டும் அணிந்துக் கொண்டார். மற்றவற்றை அங்கிருந்த டீப்பாயில் வைத்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக கழக மாநாட்டில், தமிழ்த்தாய் பாடலையடுத்து, ”பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” என தொடங்கி, உறுதிமொழியை தவெக கட்சியினர் ஏற்றுக் கொண்டனர். கட்சி கொடி விஜய் ஏற்றியதையடுத்து, தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
101 அடி உயரமுள்ள கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார் விஜய். , தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். கொடியை ஏற்றும் போது, தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோசம் எழுப்பினர்.தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரேம்பில் நடந்து வந்த நடிகர் விஜய் மீது தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை கேட்ச் பிடித்து அதை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் வந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தினார் விஜய்.
பிறகு மதசார்ப்பற்ற கொள்கை என காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து சுதந்திர போராட்ட வீரர்கள், மொழி போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார். மேலும் மாநாட்டில் தொண்டர்களின் உற்சாகத்தை பார்த்த விஜய் கண் கலங்கினார். தொண்டர்கள் உற்சாகம் அடங்கவே நீண்ட நேரம் பிடித்தது.
இந்த மாநாட்டில் இருக்கும் கூட்டத்தை பார்த்த விஜய் உற்சாகமடைந்தார். முன்னதாக இந்த மாநாடு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தற்போது 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்தார். இந்த கொடி அந்த மாநாட்டு இடத்திலேயே இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்போது கட்சியின் கொடி பாடல் இசைக்கப்பட்டது. ரிமோட் உதவியுடன் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். தலைவர் கொடி பறக்குது என்ற பாடல்தான் ஒலிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் பலர் நடனமாடி வருகிறார்கள். இன்னும் சிலர் தளபதி தளபதி என அழைத்து வருகிறார்கள்.