காவிரி நீர் திறந்து விட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் திமுக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

0
117
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் என காவிரி ஒழுங்காற்று குழு கூறியது போதாது என்று கூறிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்று ஒன்றுஉள்ளது. அந்த குழுவில் நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி நீர் என 10 நாளைக்கு திறந்து விடும் படி ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால் அந்த குழுவினர் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றால், 5 ஆயிரம் கன அடி நீர் தான் 15 நாளைக்கு திறந்துவிடும்படி பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அது போதாது என்பது நமது கோரிக்கை. இன்று மதியம் இரண்டரை மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடக்கிறது. நம்முடைய செயலாளர் மற்றும் சிடிசி சேர்மேன் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொள்கிறார்கள். அவர்களிடத்திலே நாம் இந்த கோரிக்கைகளை வற்புறுத்தக் கோரி சொல்லியிருக்கிறேன்.

24 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் தான் பயிர்கள் கருகாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும்படி கூறியிருக்கிறேன். இந்த கோரிக்கையினை அந்த கூட்டத்தில் அவர்கள் வைப்பார்கள்.அதன்பிறகு என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here