பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஒருவர் யாரென்று தெரியாமல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாத அமைப்பின் தளபதி இந்தியாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார். பாகிஸ்தானில் ஐ.ஏ.ஐ.எஸ் தெஹ்ரீக் – இ – தலிபான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன.
இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

இதற்கிடையே லஸ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பினரும் கைபர் துங்க்வா மாகாணம் பஜீர் பகுதியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தளபதியான அக்ரம் கான் அங்கு பதுங்கி இருந்துள்ளார். கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆட்கள் சேர்ப்பு பணி பிரிவின் தளபதியாக இருந்த போது பல இளைஞர்களை இந்த அமைப்பில் சேர்த்ததில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. இதனால் இந்த அமைப்பில் நீண்ட காலம் பணியாற்றி மிக முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்பட்டார். இந்த நிலையில் அக்ரம் கான் அங்குள்ள முகாமில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் லஷ்கர் – இ – தொய்பா என்ற இயக்கத்தில் நிலவிய அதிகாரப் போட்டி காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலிசார் தெரிவித்தனர். கொலையாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். அக்ரம் கான் இந்தியாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளுக்குள் ஒருவர் ஆவார். எனவே இவர் அப்பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.