மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சையில் பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைத்து வந்த பெயரை தமிழ்நாடு என 1967ம் ஜூலை 18ம் நாள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணாதுரை அரிவித்தார். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு என பெயர் சூட்டிய தினமாக ஜூலை மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடந்தது. தஞ்சை பனகல் கட்டடத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சாரண, சாரணிகள் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து முன் செல்ல. பிற மாணவ, மாணவிகள் தமிழ்நாடு என பெயர் மாற்றம் குறித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். பனகல் கட்டடத்தில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று அரண்மனை திடலில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.