தைலம் டப்பா மூடியை விழுங்கிய குழந்தை..!

2 Min Read
குழந்தையின் பெற்றோர்

இரண்டு ரூபாய் அமிர்தாஞ்சன் டப்பா மூடியை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட 10 மாத குழந்தையின் உணவு குழாயில் சிக்கி இருந்த குப்பியை அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றிய தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

குழந்தைகளிடம் எந்த பொருளை கொடுக்க வேண்டும் எந்த பொருளை கொடுக்கூடாது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் கொடுப்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இப்படிதான் தஞ்சை மாவட்டத்தில் குழந்தைக்கு நடந்த சோகம்.தெரிந்து கொள்வோம்.

தஞ்சை அடுத்த பிள்ளையார்ப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ்பாண்டி அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர். இவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து இரவு உணவு அருந்தி உள்ளனர். அப்போது இவர்களது 10 மாத ஆண் குழந்தை தருனேஷ் கையில் வைத்து விளையாடி கொண்டு இருந்த இரண்டு ரூபாய் அமிர்தாஞ்சன் டப்பா மூடியை விழுங்கி விட்டு மூச்சுவிட முடியாமல் அழுததை கண்டு.பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை தஞ்சை அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

குழந்தை மார்பு பகுதி எக்ஸ்ரே

மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள் குழந்தை மார்பு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் குழந்தையின் உணவு குழாயின் மேல் பகுதியில் ஒரு மூடி சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் மருத்துவர்களை ஆலோசித்து உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை இல்லாமல் மூடியை உணவு குழாயில் இருந்து அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.பின்னர் குழந்தை தருனேஷ் மூசுவ்ட ஆரம்பித்தார் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறும்போது, 3 செ.மி உள்ள மூடியை மருத்துவ குழுவினர் துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்யாமல் மூடியை அகற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டுவதாக தெரிவித்தார்.குழந்தைகள் கையில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை தரக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.

மருத்துவர்கள்

ஆபத்தான நிலையில் கொண்டு வந்த தங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி கூறினார்கள்.இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்ககூடாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

Share This Article
Leave a review