புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
வானிலை ஆய்வு மையம்

தமிழக மக்களே! சென்னை, திருவள்ளூர் உட்பட 20 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்ட போகுது மழை. தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கோடைக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சத்தில் இருந்துள்ளது.ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரையிலும் கூட வெப்பம் உச்சத்தில் இருந்தது.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை.அது ஒரு வகையில் நமக்கு ஆறுதல்.

- Advertisement -
Ad imageAd image

அதன் பின்னரே வெப்பம் படிப்படியாகக் கட்டுக்குள் வந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.  சென்னையைப் பொறுத்தவரைப் பல நாட்கள் வெயில் சதமடித்திருந்தது. மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே நிலவி வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரே வெப்பம் குறைந்து சில் கிளைமேட் ஏற்பட்டது.

நேற்று கூட சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்திருந்தது. அதீத வெயிலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது சற்றே நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பருவமழை தொடரும் என்பதால் மாநிலத்தில் பல இடங்களிலும் மழை தொடர்ச்சியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இதற்கிடையே திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மழை காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a review