சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த மத்திய அரசு சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.

2 Min Read
  • வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த மத்திய அரசு சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும் என கும்பகோணம் அருகே சுவாமி மலையில் இன்று நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார பின்னணி கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தேசிய பொது குழு கூட்டம் நடைபெற்றது.இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரண்மனைகளை நட்சத்திர விடுதிகளாக மாற்றி ஹோட்டல் தொழில் ஈடுபட்டுள்ள 70க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினர்கள் பங்கேற்பு.

இந்தியாவில் ஹெரிடேஜ் ஹோட்டல் சங்கத்தினரின் 23 வது பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள இண்டிகோ ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் ஜோத்பூர், ஜெய்பூர், ஜெய்சல்மிர் போன்ற இடங்களில் அரண்மனைகளை நட்சத்திர விடுதிகளாக மாற்றி ஹெரிடேஜ் ஹோட்டல் தொழில் நடத்தும் நபர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டஅரச குடும்பத்தினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் ஹெரிடேஜ் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த ஒன்றிய அரசு ஹெரிடேஜ் ஹோட்டல் தொழிலை ரியல் எஸ்டேட் பிரிவில் வைத்துள்ளது இதனை இன்ஃப்ரா ஸ்டெக்சர் ஸ்டேட்டஸ்க்கு மாற்றி தர வேண்டும் எனவும்,
இடிந்த , தொன்மையான கட்டிடங்களை ஹோட்டல்களாக மாற்றிட ஒத்துழைப்பு தர தாங்கள் தயார் என்றும் அதனை ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைப் போல ஹெரிடேஜ் ஹோட்டல் தொழில் வளர்ச்சிக்கு அரசின் விதிகள் தடைகளாக உள்ளது .இதனை ஒன்றிய அரசு போக்க வேண்டும் என்றும், ஹெரிடேஜ் சுற்றுலா தொழிலை மேம்படுத்த இந்திய சுற்றுலா துறை பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ,தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் அளவிற்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவதாகவும் இந்தியாவில் பாரம்பரிய கலாச்சார மரபு சின்னங்கள் அதிகம் உள்ள இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளை விட இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியாவில் கடற்கரைகள் ,இயற்கை காட்சிகள் குறைவில்லாத நிலையில், இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணம் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்க வில்லை என ஹெரிடேஜ் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் ஸ்டீவ் போர்ஜியா
(Steve Borgia) தெரிவித்தார்.
பேட்டி பதிவு உள்ளது.

Share This Article
Leave a review