நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் – நடிகை கௌதமி..!

2 Min Read

தன்னுடைய நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய நடிகை கௌதமி. செய்தியாளர் வந்ததை அறிந்து உடனடியாக நடிகை வெளியேறியதால் எப்.ஐ.ஆர். நகல் பெற்று செல்ல மறந்த நடிகை கெளதமி.

- Advertisement -
Ad imageAd image

பிரபல தமிழ் திரைப்பட நடிகை கௌதமி அவர், சினிமாவில் நடித்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி இருந்தார்.இந்நிலையில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக கடந்த மாதத்தில் இருந்து பரபரப்பு உண்டாகி இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காவல் ஆணையரிடம் நடிகை கௌதமி தனது நிலம் அபகரித்து விட்டதாகவும், நில மோசடி செய்யப்பட்டதாகவும் குறித்து புகார் அளித்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம்

அப்புகாரில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான 46 ஏக்கர் நிலத்தை அவரது மேலாளர் அழகப்பன்,அவரது மனைவி நாச்சால் மற்றும் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன், ரமேஷ்சங்கர் என நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உட்பட ஆறு நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை கெளதமியின் நிலத்தை மோசடி செய்ததாக அவரது மேலாளர் அழகப்பன், அவரது மனைவி நாச்சால் உள்ளிட்ட ஆறு பேர் மீது மோசடி மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தனது நில மோசடி தொடர்பான எஃப்.ஐ.ஆர் நகல் பெற தனது வழக்கறிஞர் மற்றும் சகோதரியுடன் நடிகை கௌதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வருகை புரிந்தார்.

நடிகை கௌதமி

நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய நடிகை கௌதமியின் வருகையை அறிந்து செய்தியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்றதை அறிந்த, நடிகை கெளதமி உடனடியாக அவசர அவசரமாக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். செய்தியாளர் வந்ததை அறிந்து, செய்தியாளர்கள் சந்திப்பை மறுத்து எப்.ஐ.ஆர்.நகலை கூட அவர் பெற்று செல்ல மறந்து உடனடியாக நடிகை கெளதமி வெளியேறி காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

நடிகை கௌதமி புகாரைத் தொடர்ந்து முதல் முறையாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review