- மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தியதில் 70 பேர் மரணமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, பயிற்சி இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பயன்படுத்தக் கூடாது என மின்சார வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீ வெண்ணிலா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tamil-nadu-karunanidhis-son-in-law-murasoli-selvam-passes-away-stalin-celebrities-pay-tearful-tributes/
அந்த மனுவில், மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளில் பயிற்சி பெறாதவர்களை பயன்படுத்துவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 100 பேர் மின் விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, மின்வாரியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றவில்லை என்றும் அதன் காரணமாக சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கேங்மேன் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி. பாலாஜி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம் வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார.வழக்கு குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.