திருப்பத்தூர் மாவட்டம், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற முஸ்லீம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம். மனைவியின் கணவர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தனது மனைவியை கொடுமைபடுத்துவதாக புகார். பத்திரமாக மீட்ட காவல் துறை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நவாஸ் பாஷா வயது (39). இவரது மனைவி ஹீனா பேகம் வயது (31). இருவருக்கும் திருமணமான நிலையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் அவரது மனைவி கடந்த 6 மாதங்களாக தனது தாய் வீடான திருப்பத்தூர் மாவ்ட்டத்தில் அருகே உள்ள எஸ்.என்.நகரில் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஹீனா பேகத்தின் சகோதரரான அய்யூப் வயது (40). இந்த இடம் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்து, வீட்டு வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். பின்னர் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி சென்றுள்ளார்.
அங்கு பணிக்கு சென்ற பிறகு தான் தன்னை சித்தரவதை செய்வதாகவும், தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்று ஹீனா பேகம் கூறியுள்ளார். ஹீனா பேகம் கூறியதாவது, தான் சொந்த ஊருக்கு வந்து விடுகிறேன் என்று, தனது கணவர் நவாஸ் பாஷாவிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மனைவியின் கணவர் நவாஸ் பாஷா என்பவர், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களிடம், புகார் மனு கொடுக்கப்பட்டது.

அந்த புகாரை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் என்பவரும், காவல் துறை உதவியும் கொண்டு குவைத் நாட்டில் பணி செய்து வரும் ஹீனா பேகத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். சொந்த ஊர் வந்த ஹீனா பேகம் காவல் நிலையத்திற்கு சென்று, ஹீனா பேகம் மற்றும் அவரது கணவருமான நவாஸ் பாஷா இருவரும் சேர்ந்து, காவல் துறைக்கு நன்றி தெரிவித்து விட்டு, ஹீனா பேகம் தனது கணவர் நவாஸ் பாஷா உடன் வீட்டுக்கு சென்றார்.