நீலகிரி மாவட்டத்தில்உதகை 200 ஆண்டு நிறைவடைவதை யொட்டி பலூன் திருவிழா இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.!

1 Min Read

சுற்றுலா நகரமான உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு நிகழ்ச்சியாக உதகை பர்ன்ஹில் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலூன் திருவிழா இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகையில் முதன்முறையாக வெளிநாட்டு பறவைகளை கண்டு களிக்கும் வகையிலும், அவர்களுக்கு உணவு அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பறவை சரணாலயத்துக்கு செல்வது போன்ற புத்துணர்ச்சியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்பி அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review