தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு ஆண்டு பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது

0
96
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள்

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் தமிழகம் முழுவதும் 3000 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரண உதவி, அரசு திட்டங்கள் ஆகியவற்றை பெற்று தந்து தொழில் பயிற்சி மறுவாழ்வு பயிற்சி அளித்து வருகிறது சிபா நிறுவனம்.

இந்த நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட செய்வது என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் அனுகிரகா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனத் தலைவர் திரு ரவிச்சந்திரன் இதனை செயல்படுத்தி வருகிறார். இவரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்த நிறுவனம் தொடங்கி இங்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு, தங்குமிடம் மறுவாழ்வு பயிற்சி ஆகியவை முத்திரமாக இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது இந்த இல்லத்தில் தான் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு பொதுக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர் சந்தோஷ் குமார் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். இந்த நிகழ்வில் தண்டுவடம் காயமடைந்தோர் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வங்கி கடன் பெறுவது, அரசு சலுகைகளை பெறுவது, மருத்துவ உபகரண உதவிகளை பெறுவது, உள்ளிட்ட கருத்துக்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்த விழாவில் இயன்முறை மருத்துவர் டாக்டர் கஜேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இயன் முறை மருத்துவர் டாக்டர் சாம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில் சமூக சேவகர் அருணா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அத்துடன் கோவை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீஷ் கலந்து கொண்டு தண்டுவடம் காயமடைந்தோர் தங்களின் தேவைகளை பெற எவ்வாறெல்லாம் போராடினார்கள் என்று விளக்கி பேசினார். அத்துடன் அவர்களுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்டங்களும் பெற்றுத் தருவதில் தான் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் தலைவர் கருணாகரன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சரத்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here