ஐரோப்பிய நாடான இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து, ”பிரிட்டிஷ் ஏர்வேஸ்” பயணியர் விமானம், தினமும் காலை 5:45 மணிக்கு சென்னை விமான நிலையங்களில் வரும், சேரும். அந்த விமானம் மீண்டும் காலை 7:50 மணிக்கு சென்னை விமான நிலையங்களில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அதேபோல அந்த விமானம் நேற்று காலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காலை 5:30 மணிக்கே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

இந்த விமானத்தில் பயணிக்க இருந்த 232 பயணிகள் விமான நிலையங்களில் தயாராக இருந்தனர். அந்த விமானத்தின் விமானி, சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்ததில் விமானத்தில் இயந்திர கோளாறு பிரச்சனை இருப்பதாக கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்குவது ஆபத்து என்பதை அறிந்த விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமான பொறியாளர்கள் குழுவினர், அந்த விமானத்திற்குள் ஏறி இயந்திரக் கோளாறு பிரச்சனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து விமானத்தில் காலை 10:30 மணி அளவில் விமானத்தின் இயந்திரக் கோளாறு பிரச்சனை சரி செய்யப்பட்டது. அதன் பின் விமானம் 3 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக சென்னையில் இருந்து, பின்னர் லண்டன் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு பிரச்சனை கண்டுபிடித்த விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 232 விமான பயணிகள் உயிர் தப்பினர்.