வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன் மற்றும் மேகநாதன் பீக்டைம் நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வழியாக வேலூர் அடுத்த பென்னாதுரை சேர்ந்த சதீஷ் என்பவர் பிரியா ராம்கோ அல்ட்ராடெக் சிமெண்ட் என்ற நிறுவனத்தில் 407 ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சிக்னலை மீறி சென்றதாக போக்குவரத்து காவல்துறையினர் வண்டியை மடைக்கி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஓட்டுநருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிலவியது இதில் பேருந்து ஓட்டுநர் தன்னை உதவியாளர் கன்னியப்பன் தாக்கினார் என கடுமையான குற்றச்சாட்டை வைத்து தனது மொபைலில் தொடர்ந்து வீடியோ எடுக்க தொடங்கினார்.

எதனை எடுத்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் திடீரென சூழ்ந்ததால் காட்பாடி திருவலம் சாலை வேலூர் சித்தூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அன்பு இடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இச்சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.