Thanjavur : மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி , உறவினர்கள் சாலை மறியல்

0
25
உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி

மண்சரிவு விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் லாயம் பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு செய்யும் பணி நேற்று மாலை நடைபெற்ற வந்தது இதில் 20 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில் பணி முடிந்து மேலே வந்த 2 பேர் மண் சரிவு ஏற்பட்டு அதில் மாட்டிக் கொண்டார்கள் .

மேலும் மண் சரிவில் ஈடுபட்ட தேவேந்திரன் மற்றும் ஜெய நாராயணமூர்த்தி என்ற இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் மண் சரிவில் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வந்தனர் .

மீட்பு பணி

பின்பு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேவேந்திரன் என்பவர்‌ ஒரு மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார் பின்பு மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஜெயநாராயண மூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார் .

பின்பு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது . இச்சம்பவம் தஞ்சையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில் ஜெயநாராயண மூர்த்தி உறவினர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அவரது உடலை வாங்க மறுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது மேலும் உயிரிழந்த ஜெயநாராயண மூர்த்திக்கு இழப்பீடாக தமிழக அரசு 30 லட்சத்தை அறிவித்திட வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். எந்தவித பாதுகாப்பும் இன்றி தொழிலாளர்கள் பாதாள சாக்கடை பைப் லைன் மறு சீரமைப்பு பணிக்கு அனுப்பியதால் , இதற்கு முழு காரணம் மாநகராட்சி முதன்மை பொறியாளர் தான் ஒப்பந்ததாரரின் அலட்சியமே உயிரிழந்ததற்கு காரணம் எனவும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here