உலகின் முக்கிய அடையளச்சின்னங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயில்.சிறப்பு மிகுந்த தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பெரியகோவில் வளாகத்தில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் காலை – மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே – 1ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் அடுத்தடுத்த நிகழ்விலும் கலந்து கொள்வார்கள்.அது மட்டுமில்லாமல் திருத்தேரோட்ட நிகழ்வில் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கல்ந்து கொள்வார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.