- பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாக தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறாமல் இருந்த தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலப் பாதை சுத்தம் செய்யப்பட்டு கிரிவலப் பாதை திறக்கப்பட்டது.
பௌர்ணமி நாளான இன்று பெரிய கோயிலை சுற்றி பக்தர்கள் சிவனடியார்கள் என ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்
தஞ்சை பெரிய கோவிலில் கிரிவல பாதை மீண்டும் திறப்பு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவல பாதையில் நடந்து சென்றனர்.
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரிவலப் பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது. பயன்பாட்டில் இல்லாமல் நிலையில் மீண்டும் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில் கும்பாபிஷேக பணி நடைபெற்றதால் அப்படியே நிறுத்தப்பட்டது. மீண்டும் பக்தர்கள் கோரிக்கை ஏற்று 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலை சுற்றி பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வகையில் பாதை சரி செய்யப்பட்டதை எடுத்து மீண்டும் கிரிவல பாதை இன்று திறக்கப்பட்டது. இதனை ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் பயன்படுத்திக் கிரிவல பாதையில் சிவ வாத்தியங்கள் முழங்க ஓம்நவசிவாசய என்ற முழக்கங்களோடு நடந்து சென்றனர்.