தஞ்சையை அடுத்த கரந்தையில் இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கருணாசாமி என்கிற பெரியநாயகி அம்மன் உடனாகிய வசிஷ்டேஸ்வரர் ஆலயம் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
இதையடுத்து 20 ந் தேதி மாலை ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மாங்கல்ய தாரணம் மற்றும் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று மகாதீபாரதனை காட்டப்பட்டது .
இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா கோவில் மேற்பார்வையாளர் ஞானவேல் உள்ளிட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.