பிரியணி என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் இந்த நிலையில் ஒரு இளைஞர் மக்களை மகிழ்ச்சியடையும் விதமாக பிரியாணி வழங்கியுள்ளார்.யார்?இந்த இளைஞர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கே திரும்பியவர் 2021-ம் ஆண்டு மேதகு திரைப்படம் வெளியான தினத்தன்று தஞ்சையில் மேதகு என்கிற பெயரில் பிரியாணி கடை ஒன்றை தொடங்கியவர்,அந்த கிளை தற்போது மூன்று கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இவருடைய பிரியாணிக்கு தஞ்சையில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவே, அதனை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஈஸ்வரி நகரில் மே-1 ல் இவரின் பிரியாணி கடையின் மூன்றாவது கிளையை திறந்தார்.அன்று ஒரு பிரியாணி ஒரு ரூபாய்க்கு கொடுக்க முடிவு செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளாகவும் உழைப்பாளர் தினத்தன்று உழைக்கும் மக்களுக்கு 1-ரூ பிரியாணியை வழங்கிய வருகிறார் இவர்.

அந்த வகையில் இந்த ஆண்டு உழைப்பாளர் தினமான நேற்று வாடிக்கையாளர்களுக்கு 1-ரூ,க்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார். முதல் 50 பேருக்கு மட்டுமே இந்த ஆஃபர் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கூட்டம் கடையின் முன்பு நிறம்பியது. 50 டோக்கன் முடிந்த பின்னரும் வயதானவர்கள் கேட்டபோதும் பிரியாணியை இலவசமாக வழங்கினார்.
மேலும் அடுத்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று இவரின் மூன்று கிளைகளிலும் 300 பேருக்கு ஒரு ரூபா காயின் பிரியாணி தர உள்ளதாகவும் கூறினார்.