கரூரில் வயதான தம்பதியினர் சடலமாக மீட்பு தலை,முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள்.

2 Min Read

கரூரில் மாந்தோப்பில்  வயதான தம்பதியர்  கொல்லப்பட்டு கிடந்தனர். தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர். யார் கொலை செய்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.
மாந்தோப்பை குத்தகை எடுத்து வசித்து வந்த தம்பதியரை கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த வயதான தம்பதியர் தங்கவேல் (67), தைலி (61) இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகில் உள்ள ஓடையூர் கிராமத்தில் மாந்தோப்பு ஒன்றை குத்தகை எடுத்து மாங்காய் வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்புத்தூரிலிருந்து மாங்காய் விளையும் சமயங்களில்  ஓடையூர் கிராமத்தில் உள்ள  தோப்பை எடுத்து மாங்காய் பறித்து வியாபாரம் செய்து வருவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் மாங்காய் தோப்பை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,  இந்த ஆண்டு அவர்கள் கரூரில்  சரவணகுமார் என்பவரது மாந்தோப்பை குத்தகை எடுத்து இருந்தனர் இதனால் கணவன் மனைவி இருவரும் அந்த தோப்பிலேயே ஒரு சிறிய குடிசை அமைத்து அதில் தங்கி இருந்தனர்.
நேற்று அதிகாலை கணவன் மனைவி தங்கவேல் மற்றும் தைலி இருவரும் தலை மற்றும் முகங்களில் பலத்த காயங்களுடன் சுடலமாக கிடந்தனர்.
தகவல் அறிந்து  வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தராவதனம் சம்பவ இடத்துக்கு  நேரில் சென்று  கொலை நடந்தது குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. வயதான தம்பதியர் கொலை செய்த சம்பவம் அறிந்த சுமார் 100க்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருவர் உடலும் தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
வயதான தம்பதி கொல்லப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குத்தகைதாரர்களுக்குள் ஏதாவது மொட்டை மோதல் உள்ளதா அல்லது தொழில் போட்டியில் வேறு யாராவது கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதா என்கிற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீசார் மேலும் இறந்து போன தம்பதியின் தூரத்து உறவுகள் ஏதாவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review