- திருச்சியில் தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலை தஞ்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கொடி அசைத்து துவக்கி வைத்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தஞ்சையில் இருந்து பகல் நேரத்தில் ரயில் சேவை வேண்டும் என ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கையின் படி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வேண்டுகோளை ஏற்று தென்னக ரயில்வே திருச்சி தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் தஞ்சை வழியாக இன்று முதல் இயக்குகிறது.
திருச்சியில் இருந்து தஞ்சை வந்த ரயிலை வரவேற்ற தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி லோகோ பைலட்டுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/an-agent-from-salem-who-was-sending-work-abroad-was-abducted-near-thanjavur-old-bus-stand/
பின்னர் கொடி அசைத்து துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார். சோதனை ஓட்டமாக டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை திங்கள், வியாழன் தவிர வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் வரவேற்பை பொருத்து தொடர்ந்து இந்த ரயில்சேவை நீட்டிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தெரிவித்தார்.