300 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

1 Min Read
விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.  மேலும் அந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராகவும் நியமித்திருக்கிறார்.

மேலும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

300 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இந்நிலையில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை விரைவில் வரவிருக்கிறது.  இதற்காக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 300 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

300 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதுபோன்று தமிழகத்தின் பிறப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை செய்ய விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும் விஜயின்  உத்தரவின்படி வடசென்னை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமையில் ராயபுரம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு இன்று கோடைக்கால உணவுகள், நீர்பானங்கள் வழங்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவைகளை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி N.அனந்து அவர்கள் வழங்கினார்.

Share This Article
Leave a review