செய்திகளில் வெளியான நபர்கள்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.!

2 Min Read
அண்ணாமலை தளபதி விஜய்

தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் முதல் மதுரை மாவட்டத்தில் நடைபயணத்தை ஆரம்பித்தார். செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார்.

- Advertisement -
Ad imageAd image
அண்ணாமலை

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் நெருங்கி வருபவர்களுடன் செல்பி எடுத்தும் கவர்ந்து வருகிறார். இந்த நடை பயணத்தின் போது, தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக சாடிவரும் அண்ணாமலை அ.தி.மு.க. தலைவர்கள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பங்கேற்ற ரசிகர்கள் இந்தநிலையில் நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.

மக்கள் இயக்க நிர்வாகிகள்

அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்த போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு
தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன்
அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.

தளபதி விஜய் அண்ணாமலை

\

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள இணையப் பதிவில் கூறியிருப்பதாவது:-

தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review