மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்: 500 பேர் பலி; இஸ்ரேல்- ஹமாஸ் மாறி மாறி புகார்.

2 Min Read
மருத்துவமனை

நேற்று காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 500 பேர் உயிரிழப்பு. ஐ.நா பொதுச் செயலாளர் உள்பட உலக தலைவர்கள் கண்டனம். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

மருத்துவமனை மீது தாக்குதல்.

காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7-ம் தேதி போர் தொடங்கியது. இரு தரப்பினரும் ஏவுகணைகளை ஏவி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தொடங்கி 12 நாட்கள் ஆகி உள்ளன. இரு தரப்பிலும் 4000க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணிக்கை இன்னும் அதிகமாக கூட இருக்கலாம்.

சிகிச்சை

இந்த நிலையில், நேற்று ஹமாஸ் அமைப்பினரின் காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இஸ்ரேஸ் வான்வழித் தாக்குதல் தான் காரணம் என பாலஸ்தீனிய அதிகாரம் குற்றஞ்சாட்டியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் இதை மறுத்துள்ளது. மற்ற பாலஸ்தீனிய அமைப்புகள் தவறாக ராக்கெட் வீசிப்பட்டதில் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா ஆதரவு.

ஹமாஸுடனான போரில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டிற்கு செய்ய உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர், இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பணயக் கைதிகளை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஹமாஸிடமும், காஸாவிற்கான மனிதாபிமான உதவிகளை உடனடியாக தடையின்றி வழங்க இஸ்ரேலிடமும் வேண்டுகோள் விடுத்ததாக குட்டரெஸ் கூறினார்.

தாக்குதல்

ப.சிதம்பரம்.

காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் வெளியிட்டுள்ள X பதிவில், காசா மருத்துவமனை தாக்குதல் கண்டனத்திற்குரியது. . ‘நேற்று காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையாக இருந்தால், அது கண்டிக்கத்தக்கது’ என்று அவர் கூறினார். மேலும் பிரச்சனைகளுக்குப் போர் தீர்வாகாது. இந்தியா போன்ற நாடுகள் தலையிட்டு, சண்டையை நிறுத்தவும், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

காசா மருத்துவமனை தாக்குதலுக்கு ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் பொது துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தார். “காசா மருத்துவமனையில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மீது வீசப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் குண்டுகளின் தீப்பிழம்புகள், விரைவில் சியோனிஸ்டுகளை எரித்துவிடும்” என்று அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

“காசாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனையின் மீத நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார்.

Share This Article
Leave a review