தெலுங்கானா மாநிலத்தில் வெறி நாய்கள் கடித்து கொதறியதில் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் 7 வயது மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது் .
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் காசிபேட் பகுதியில் ரெயில்வே காலனிக்கு சொந்தமான பூங்கா ஒன்று அமைந்துள்ளது . இங்கு உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர் .
இவர்கள் இந்த பகுதியில் இருக்கும் சாலைகளில் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகின்றனர் . இன்று புலம்பெயர்ந்த தொழிலாளியின் மகனான சோட்டு ( 7 ) என்ற சிறுவன் , இந்த பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் . அப்போது தெருநாய்கள் தாக்கின சிறுவன் சோட்டுவை சுற்றி வளைத்து தாக்க தொடங்கி உள்ளது. மேலும் ஒரு நாய் சிறுவனின் கழுத்தை கொதறியது .
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர் . தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் அறிந்த வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ தாஸ்யம் வினய் பாஸ்கர், வாரங்கல் மேயர் குண்டா பிரகாஷ் ராவ் ஆகியோர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கினர்.
வாரங்கல் பகுதியில் சமீப காலமாக தெரு அதிகரித்து வருவதும் , பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகியுள்ளது கடந்த ஒரு மடத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு குழந்தைகள், பெரியவர்கள் என 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களும் , புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெ
ருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் .