இப்போதெல்லாம் செல்பி எடுக்கிற மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எங்கே இருந்து செல்ஃபி எடுக்கிறோம் என்று கூட தெரியாமல் செல்பி எடுத்து வருகின்றார்கள். நடிகர்களிடம் செல்பி எடுப்பதில் தவறில்லை. ஒரு போற்றுதலுக்கு உரியவரிடம் செல்பி எடுப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லாம் மீறி ஆபத்தான இடங்களில் கூட செல்பி எடுத்துக் கொண்டு அதை சமூக வலைதளங்களில் பரவ விடுவதை ஒரு நோயாகவே மாறி வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களிடம். வனப்பகுதிகளில் கூட யானை சிறுத்தை போன்ற வனவிலங்குகளுக்கு இடையில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் வழக்கம் வெகுவாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து கொண்டு அப்பகுதியில் உள்ள நீட்டிங் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். வழக்கமாக இது போன்ற நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள் விடுமுறை நாட்களில் வெளியே எங்கேயாவது சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால்.,பாண்டியனும் விஜய்யும் அவருடன் தங்கி உள்ள சக நண்பர்களிடம், ரயில் நிலையம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர் அதன் பின்னர் நண்பர்களிடம் ரயில் முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்னவாறு ரயில் நிலையம் சென்றுள்ளனர் நீண்ட நேரமாக ரயில் வராததால் அங்கேயே காத்திருந்தனர் அப்போது திருப்பூர் அனைப்பாளையம், சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்த விஜய்யும்., பாண்டியனும்., அவ்வழியே வந்த ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது, ரயிலின் வேகம் தெரியாமல் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் ரயில் முன் விழுந்தனர் . அந்த இடத்தில் ரயிலின் வேகத்தால் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பாண்டியன் மற்றும் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ரயில்வே போலீசார்.
குடும்ப சூழலை கருத்தில் கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக செல்ஃபி மோகத்தால் ஆபத்தை உணராமல் திருப்பூரில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியின்ரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.