இட்லி, சாம்பாருக்கு வரி விதிக்கும் மோடி அரசு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எய்ம்ஸ் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என்று மாநில விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான் ஏ.கே.எஸ்.விஜயன் கடுமையாக சாடியுள்ளார் .
நெல்லை மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நெல்லை டவுண் வாகையடி முனையில் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக மாநில விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான் ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் , மொழிக்காக உயிரிழந்த தியாகிகளின் வீரத்தை போற்றவும் வீரவணக்கம் செலுத்தவும் உரிமை திமுகவிற்கு மட்டுமே உண்டு.

இதற்கு காரணம் மொழிக்காக பணியாற்றிய இயக்கம் திமுகதான். 1938- ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்று வரை உள்ளது இந்தி மொழியை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை முதல்வர் தந்து கொண்டு இருக்கிறார் மகத்தான திட்டமான கலைஞர் தந்த திருமண உதவித்தொகை திட்டத்தின் நீட்சியாக புதுமைப் பெண் திட்டம் மூலம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 54 பேர் பயன்பெற்று வருகின்றனர் இந்தியாவின் முன்னோடி திட்டமாக காலை சிற்றுண்டித் திட்டம் மூலம் 17 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 33 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர் இதுபோன்று ஏழை எளிய மக்கள் பயன்பெறும் ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி தமிழகம் வந்த போது கூட பார்க்கவில்லை அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

குறிப்பாக அவர்களுக்கு நன்றாக தெரியும் இது திராவிட மண், இங்கு நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்பது, ஒன்றிய அரசின் வரிபகிர்வு மிகமோசமான கொள்ளை இட்டலி சாம்பாருக்கு வரி விதித்தார்கள் ஆனால் தமிழகத்தில் நடக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மற்ற மாநிலங்களைப்போல் நிதி ஒதுக்கவில்லை, மிக குறைந்த அளவில் நிதி தந்துள்ளனர்.
5 எய்ம்ஸ் மருத்துவமனையில் மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு சொந்த நிதியை கொடுத்து விட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கடன் கேட்டு உள்ளதாக கூறுகிறார்கள். மோடி தலைமையிலான அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என கூறினார். இந்த கூட்டம்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிலமணியான், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, பகுதி செயலாளர்கள் நமச்சிவாயம், சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.