- கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகளால் அதிகம் வாங்கப்பட்ட பங்குகளில் பெரும்பாலும் பெரிய நிதி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்கியுள்ளன. அதன்படி கடந்த செப்டம்பர் 2024 காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.18,200 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அதே நேரத்தில், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.45,100 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை வாங்கியுள்ளன. பெரிய நிதி நிறுவனங்களில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், பிஎன் காட்கில், ஜிஇ டி&டி இந்தியா மற்றும் கிராஸ் போன்ற பங்குகள் அதிகம் வாங்கப்பட்டுள்ளன.
HDFC மியூச்சுவல் ஃபண்ட்: எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் ஆனது கடந்த செப்டம்பர் மாதத்தில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகளை அதிகம் வாங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக 1,36,62,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மற்ற முதலீடுகளில் பி.என். காட்கில், டிப்பியூசன் இன்ஜினியரிங், பஜாஜ் ஹெல்த் ஆகியவை உள்ளன.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்: அதேபோல், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆனது செப்டம்பரில் ஷிவாலிக் பீம்தாலின் 28,65,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் அதிகம் வாங்கப்பட்ட மற்ற முதலீடுகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஐசிஆர்ஏ, கிர்லோஸ்கர் ஆயில் அடங்கும். கோடக் மியூச்சுவல் ஃபண்ட்: செப்டம்பரில் அதிகம் வாங்கப்பட்ட கோடக் மியூச்சுவல் ஃபண்டின் பங்குகள் GE T&D இந்தியா ஆகும். இது 15,85,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மற்ற பெரிய முதலீடுகளில் மேக்ஸ் எஸ்டேட்ஸ், பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், கிராஃபைட் இந்தியா பங்குகளும் உள்ளன. டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட்: இதன் செப்டம்பர் மாத அதிக முதலீடுகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் 67,14,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் பிற முக்கிய நிறுவனங்கள் முதலீடுகள் பிஎஸ்இ, இண்டிகோ பெயிண்ட்ஸ், அவலோன் டெக்னாலஜிஸ் ஆகியன உள்ளன.
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட்: ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் செப்டம்பரில் அதிகம் வாங்கிய பங்குகளில் GE T&D இந்தியா பங்குகள் உள்ளன. இது 25,84,000 பங்குகளை வாங்கியுள்ளது. மற்ற முக்கிய நிறுவனங்கள் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், பிஎன் காட்கில், கிராஸ் ஆகும். ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்: செப்டம்பரில் ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் அதிகம் வாங்கிய பங்குகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளது. இதன் 71,11,000 பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் முதலீடுகளில் வெஸ்டர்ன் கேரியர்ஸ், டைனமிக் டெக்னாலஜிஸ், விஎஸ்டி டில்லர்ஸ் உள்ளன. எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட்: எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் செப்டம்பரில் அதிகம் வாங்கிய பங்குகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளது. மொத்தம் 1,88,29,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மற்ற முன்னணி நிறுவன முதலீடுகளி GE T&D இந்தியா, பிஎன் காட்கில், கிராஸ் நிறுவங்களும் உள்ளன.
டாடா மியூச்சுவல் ஃபண்ட்: செப்டம்பரில் டாடா மியூச்சுவல் ஃபண்ட் அதிகம் வாங்கிய பங்குகளில் ஸ்பைஸ்ஜெட் உள்ளது. வாங்கிய பங்குகள் 2,02,92,000 ஆகும். இதன் மற்ற முக்கிய நிறுவனங்கள் முதலீடுகளில் GE T&D இந்தியா, சியட், ஓரியண்ட் சிமெண்ட் ஆகியன உள்ளன. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்: செப்டம்பரில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகம் வாங்கிய பங்குகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் 1,21,43,000 பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மற்ற முக்கிய நிறுவன முதலீடுகளில் மெடி அசிஸ்ட் ஹெல்த், ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், கிராஸ் உள்ளன.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/cant-even-go-to-the-marriage-house-men-are-lamenting-in-ukraine-because-of-their-own-army-what-is-the-reason/
யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட்: இறுதியாக, யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் செப்டம்பரில் அதிகம் வாங்கப்பட்ட பங்குகளில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளது. இதன் பங்குகளின் எண்ணிக்கை 67,52,000 ஆகும். இதன் மற்ற முதலீடுகளில் ஷிவாலிக் பீம்டெல், கேஇசி இன்டர்நேஷனல், சபையர் ஃபுட்ஸ் உள்ளன.