பாலாற்றில் தோல் கழிவுகள் , குடிநீர் விஷமாக மாறும் அபாயம் .

2 Min Read
மாசுபட்டுக் காணப்படும் பாலாறு

தண்ணீர் இன்றி வாழ்வது மிகவும் சிரமமான ஒன்று அந்த வகையில் பெரும்பாலான நீர் நிலைகளை இப்போது பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இதனால் பாதிப்படைவது அந்த பகுதியைச் சார்ந்த மக்கள்தான்.இந்த ஆண்டு  பருவமழை பொய்த்து போனது , விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் தேங்கி இருப்பதாக செய்தி குறிப்புகள் தெரிவித்தாலும் கூட , குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது .

இந்த நிலையில்் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்தப் பகுதியில் பாய்ந்து ஓடும் பாலாறு தான் பெரும்பாலும் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்து கொண்டிருக்கிறது.

கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகள்  தங்கள் நிறுவனத்தில் சேகரிக்கப்படும் தோல் கழிவுகளை சுத்திகரிக்காமல் பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதனால்  மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தின் மேல்மட்டம் வரை நுரை பொங்கி தூர்நாற்றத்துடன் பாலாறு ஓடுகிறது. இது தொற்று நோயை ஏற்படுத்தும அபாயத்தை உருவாகியுள்ளது.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாலாற்றில் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யாமல் தோல் கழிவுகளை பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்பட்டு, தொழிற்சாலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

எனினும் பெரும்பாலான தோல்தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக கழிவுநீர்களை திறந்துவிடும் செயல் தொடர்கதையாகியுள்ளது .

இதனால் பாலாறு முற்றிலும் மாசு அடைந்து வரும் நிலையில் பாலாற்றை நம்பி இருக்கும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரும் மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தோல் தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படியே போனால் பாலாறு  நீர் முழுவதும் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

Share This Article
Leave a review