மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கி உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தஞ்சையில் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டிகொண்டு மெளன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தர் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு தாய்மார்களின் ஆதாவு என்ற முன்னெடுப்பாக தஞ்சை ரயில்நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கண்களில் கருப்பு துணிகட்டிகொண்டு முழக்கங்கள் எழுப்பாமல் மெளனமாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் முன்பு மெளனம் காத்து போராட்டம் செய்தனர்.