வாகன சோதனையில் நிற்காமல் சென்ற சொகுசு காரை துரத்தி வந்து தடுத்து நிறுத்திய ஆயுதப்படை காவலரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசி கெத்து காட்டிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மக்கள் அச்சம் இல்லாமல் வாழ சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் காவலர் ஒருவரை மிடுக்கான ட்ரஸ் போட்டு. ஆடம்பர சொகுசு காரில் வந்த இரண்டு பேர் பீப் போடும் அளவிற்கு ஆபாசமாக பேசி கெத்து காட்டி காரை எடுக்க முயன்றவர்களிடம் “வண்டிய நிறுத்தச் சொன்ன நிறுத்த மாட்டிங்களா, எவ்ளோ தூரம் சேஸ் பண்ணி துரத்திட்டு வரதுன்னு” கேட்ட காவலரை பீப் போடும் அளவிற்கு ஆபாசமாக பேசி காரை எடுத்து செல்ல முயன்றவர்களை செல்போனில் படம் பிடித்தவாறு காவலர் யோவ் என்று அழைக்க டிசர்ட் போட்டு இருந்த டிப்டாப் நபர் நான் எவ்ளோ சம்பளம் வாங்குறேன் தெரியுமா. நீ எவ்ளோ சம்பளம் வாங்குற என கேட்டுக்கொண்டே காவலரை அடிக்க முற்படும் நோக்கத்தில் வரும் இந்த இரண்டு நபர்களின் பெயர்கள் ஹரிபாபு, காரல் மார்க்ஸ். ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் காட்டு ராஜா வை ஏய்ங்குற என கெட்ட வார்த்தைகள் பேசி திட்டி தனியா வச்சி அடிச்சி விட்டுருவேன் என மிரட்டி இடுப்பில் உள்ள பெல்ட் கழண்டு தொங்குவது கூட தெரியாமல் மரியாதையா பேசுனு சொன்ன காவலர் காட்டுராஜாவை தாக்கினார்கள்.
யாருடா நீ என காரில் அமர்ந்தபடி திமிராக கேள்வி கேட்ட டிப்டாப் ஆசாமி நான் ஆம்பள டா என பதில் அளித்த காவலரை பார்த்து நீ கவர்மென்ட் சம்பளம் வாங்குற, யூனிபார்மை கழட்டிட்டு வா அவதூறு வார்த்தை பேசி அறுத்துடுவேன்னு சொல்லிட்டு காரை எடுத்து சென்றனர். ஹரிபாபுவும், காரல்மார்க்சும்.
தஞ்சை அடுத்த சிங்கப் பெருமாள் குளம் என்ற இடத்தில் இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தபோது, தாறு மாறாக அதி வேகமாக வந்த கார் நிறுத்தாமல் வேகமாக சென்றதால், பின்தொடர்ந்து துரத்தி வந்து சீனிவாசபுரம் அருகில் காரை மடக்கி நிறுத்தியபோது இருவரும் ஆபாசமாக பேசி| கொலை மிரட்டல் விடுத்தனர் என வீடியோ ஆதாரத்துடன் ஆயுதப்படை காவலர் காட்டுராஜா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஹரிபாபு, காரல்மார்க்ஸ் இருவர் மீதும் அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கெத்து காட்டி பேசிய இரண்டு பேரும் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்து பதுங்கி உள்ளனர்.