காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று இடங்களில் நிலக்கரி திட்டம் கைவிடுவதாக வாய்மொழியாக அறிவித்த நிலையில், அதற்கான அறிவிப்பை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு குழு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு தெலுங்கானா மாநில அரசை போல் விவசாயிகளுக்கு 10,000 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். தமிழக அரசு புதிதாக கல்லணை உள்ளிட்ட 25 மணல் குவாரிகள் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை அளவை பொறுத்து அணையை திறப்பேன் என்று முடிவு எடுப்பது காவிரி டெல்டாவிற்கு எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஜூன் 12 தண்ணீர் திறப்பது உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை மனுவினை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுவாக அளித்தனர். இதே கோரிக்கை வலியுறுத்தி நாளை மன்னார்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.