வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.!

1 Min Read
  • வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை வந்தாலே வடகடலோர மாவட்டங்களை நசநசத்துவிடும். வழக்கமாக நவம்பர், டிசம்பர் காலத்தில்தான் மழை தீவிரமெடுக்கும். ஆனால் இந்த முறை அக்டோபரிலேயே வேலையை காட்ட தொடங்கிவிட்டது. காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதிதான். நேற்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இது இன்றும் நாளையும், வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும். எனவே இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் சண். இராமநாதன். 800 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 ஜேசிபி வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 100 என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதியில் உடனடியாக மீட்பு பணிக்கு செல்வதற்கு வசதியாக அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் பணியாளர்கள் தங்கி பணிகளை செய்து வருகின்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/meteorological-department-information-red-alert-for-9-districts-including-chennai-till-4-pm-in-chennai/

உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனே அவர்கள் விரைந்து சென்று பணிகள் செய்வார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு என அதிகளவில் ஆற்று பகுதிகள் உள்ளதால் எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்தாலும் உடனே ஆற்றில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் மாமன்னர் இராஜராஜ சோழன் நடவடிக்கை எடுத்தார்.அதனை பின்பற்றி அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review