- தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவனத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் ஆய்வு செய்தார்.
அங்கு பணிபுரியும் பணியாளர்களின் ஊர், ஊதிய விவரங்களை கேட்டறிந்தார்.
தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவனத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் ஆய்வு செய்தார்.
அங்கு பணிபுரியும் பணியாளர்களின் ஊர், ஊதிய விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியில்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்டத் தொழில் மையம் இணைந்து பள்ளியக்ரஹாரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு மானியத்தில் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் குறித்து இன்று ஆய்வு செய்தோம். இந்த நிறுவனம் மூலம் படித்த டெல்டா மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் கிடைத்து வருகிறது. சாப்ட்வேர் என்றாலே சென்னை, கோயம்புத்தூர் என்று இல்லாமல் நமது தஞ்சாவூரிலே வேலை பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது டெல்டா மாணவர்களுக்கு வர பிரசாதம் . இந்நிறுவனத்தில் 300 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வெளிநாடுகள் கிளைன்ட்களை மையப்படுத்தி இந்நிறுவனம் இயங்குகிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமும் பலகோடி அளவுக்கு எட்ட வாய்ப்பு உள்ளது. எனவே டெல்டா மாணவர்கள் இது போன்ற சாப்ட்வேர் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்
பின்னர்
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் அளித்த பேட்டியில், தஞ்சையில் 6 சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் 46 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள், 120 நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு தேவையான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . இனிவரும் காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் சாப்ட்வேர் நிறுவனங்கள் உருவாகும் என தெரிவித்தார்.
பேட்டி. பிரியங்காபங்கஜம் , தஞ்சை மாவட்ட ஆட்சியர்