தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்ப பெறுக ! சீமான் கோரிக்கை…..

1 Min Read
சீமான்

நீர்நிலைகள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதனை திரும்ப பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது,”100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும் தொழில் திட்டங்களுக்குக் கொடுப்பதற்காக, நீர்நிலைகள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி இயற்றப்பட்டிருக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை தமிழ்நாடு அரசு திரும்பப்பெறவேண்டும்.

முழுவதுமாக வணிக நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பரப்பலகில் இருக்கும் நீர்நிலை வகைப்பாடு குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லாதது, நீர்வளம் குறித்தத் தமிழ்நாடு அரசின்  அக்கறையின்மையையே உணர்த்துகிறது.

தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கையளிக்கும் பிரிவு இச்சட்டத்தில் இருந்தாலும்கூட அப்படி எடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது என்று எந்த உத்தரவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை.

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பது போன்று அரசு தன் தேவைக்காகவும், மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எளிமையாக நிலம் கொடுப்பதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நீர்நிலைகள் மீது அக்கறை இன்றி, அவசரமாக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டம் அடிப்படையிலேயே முழுமையற்று அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் இச்சட்டத்தினை நாம் தமிழர் கட்சி முற்றுமுழுதாக எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review