அண்ணாமலையின் ட்விட்டர் அறிவிப்பை எல்லாம் ஏற்க முடியாது , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் .

2 Min Read
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

அண்ணாமலையில் ட்விட்டர் அறிவிப்பை எல்லாம் நாங்கள் ஏற்க முடியாது டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மாட்டோம் என நிலக்கரித்துறை அமைச்சகம் அதிகாரியபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் பிரதமருக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதி அளிக்கக்கூடாது என கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மூன்று இடங்களிலும் நிலக்கரி எடுக்க படாது என தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகள் கருத்து தெரிவித்தவர் இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தஞ்சை அரியலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வந்தது.

இதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிலக்கரித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மூன்று பகுதிகளிலும் விலக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பிரதமர் இன்று தமிழக வரும் இந்நிலையில்  அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி திட்டம் ரத்து ரத்து செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் இந்த பகுதியில் விவசாயத்தை பாதிக்க கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என
நிலக்கரித்துறை அமைச்சகம் அதிகாரியப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அண்ணாமலை அறிவித்தது எல்லாம் நாங்கள் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Share This Article
Leave a review